Thursday, April 28, 2016

தமிழ் நாடு தோ்தல் செய்திகள்


கூட்டணி கட்சியினரே பணம் கேட்டால் எப்படி? -வைகோவின் நெக்ஸ்ட் ஆவேசம்!


தேர்தல் பணிகளுக்காக நம் கூட்டணியில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல இடங்களில் பூத் செலவுக்கு முதல் சுற்றில் 15 ஆயிரம் வேண்டும். 2வது சுற்றி; 15 ஆயிரம் வேண்டும். 3வது சுற்றில் 15 ஆயிரம் வேண்டும் என லட்சக்கணக்கான பணத்திற்கு கணக்கு கொடுக்கிறார்கள். கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் பூத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் கொடுப்பார்கள். அவர்களோடு கூட்டணி வைத்திருந்த அந்த பாவத்தின் காரணமாக நம்மவர்கள் சிலருக்கு அந்த நோய் வந்திருக்கிறது. மேலும் படிக்க

Tuesday, October 30, 2012

மில்லேனியம் நாயகன்



பி கல்யாணசுந்தரம் அவர்கள் சமூக ஆர்வலர் என்ற உணர்வுடன் கடந்த 45 ஆண்டுகள் சமூக சேவையாற்றி கொண்டுள்ளார், அவர் நூலக அறிவியலில் தங்க பதக்கம் பெற்றவர் , அவர் இலக்கியம், வரலாற்றில் ஒரு MA பட்டம் பெற்று உள்ளார் , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள குமரகுருபர கலை கல்லூரியில் நூலகராக பணி ஆற்றிய அவர் தனது 35 ஆண்டு வாழ்க்கையில் அவரது சம்பளம் அனைத்தையும் தொண்டு செய்வதற்காக கொடுத்து, தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்துள்ளார் . மேலும் திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல் மற்றும் கண்கள் தானம் செய்ய முன் வந்திருக்கிறார்.

மத்திய அரசு 'இந்தியாவின் சிறந்த நூலகர் என்று `அவரை பாராட்டி உள்ளது. அவர் மேலும் 'உலக முதல் பத்து நூலகர்கள் ஒருவராக `தேர்வு. ' செய்யப்பட்டு உள்ளார் , ஐக்கிய நாடுகள் அமைப்பு 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த குடி மகன் என்ற விருதை அளித்துள்ளது ' சர்வதேச (Biographical சென்டர்)சரித்திர மையம், கேம்பிரிட்ஜ், உலகின் உயர்குடிப்பிறப்பாகவும் அவரை கவுரவித்தது. ஒரு அமெரிக்க நிறுவனம் மில்லேனியம் `நாயகன் என்று அவரை தேர்வு செய்துள்ளது. '

அவர் "பாலம்' என்ற சமூக நல அமைப்பு உருவாக்கி உள்ளார் , அதன் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்று உள்ளார்.
பாலம் அமைப்பு மூலம் அவர் வசதி பெட்ட்ரவர்களிடம் பணத்தை பெற்று இல்லாதவர் களுக்கு உதவி செய்கிறார் , தந்து நீண்ட நாள் திட்டமாக தேசீயமயமக்கப்பட்ட டிஜிட்டல் நூலகத்தை உருவாக்க எண்ணி உள்ளார்.

இந்த மாமனிதரை நினைத்து பெருமை கொள்வோம், நீண்ட நாள் அவர் சேவை தொடர வாழ்த்தி வணங்குவோம்


Monday, October 29, 2012

மத்திய அமைச்சரவையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் பெரும் மாற்றம் செய்தார்.

புது டெல்லி, மத்திய அமைச்சரவையில் நேற்று அக். - 29 -2012 பிரதமர் மன்மோகன்சிங் பெரும் மாற்றம் செய்தார். 22 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. ஆந்திரா, மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

16 ஆண்டுகளுக்கு பிறகுகாங்., வசம் ரயில்வே:
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாகக் கருதப்படும், ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. இந்த முறை, மிச்சம் மீதி இல்லாமல், ஒட்டுமொத்த துறையும், காங்கிரஸ் வசமே வந்துள்ளது; இணையமைச்சர்கள் அனைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே.
தனி பட்ஜெட், ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு, தனி ரயில் என, ஏராளமான வசதிகள் கொண்ட ரயில்வே துறையின், காங்கிரஸ் அமைச்சராக, கடைசியாக இருந்தது, காமன்வெல்த் ஊழல் புகழ், சுரேஷ் கல்மாடி. 1996ல், நரசிம்மராவ் ஆட்சியின் போது, ரயில்வே அமைச்சராக, கல்மாடி இருந்தார்.அதற்குப் பிறகு, கடந்த, 16 ஆண்டுகளாக, காங்கிரஸ் வசம் அந்தத் துறை வரவே இல்லை. கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை போன்றவற்றால், கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் துறை, தாரை வார்க்கப்பட்டது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இரண்டாவது ஆட்சியில், கடந்த மூன்றாண்டுகளாக, ரயில்வே துறையின் அமைச்சர்களாக, மம்தா பானர்ஜி, தினேஷ் திவேதி மற்றும் முகுல் ராய் இருந்தனர். முகுல் ராய் ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியின், மூத்த அமைச்சர்களில் ஒருவரான, சி.பி.ஜோஷி தற்காலிகமாக கவனித்து வந்தார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, ரயில்வே துறை அமைச்சராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தத் துறையின் இணையமைச்சர்களாக, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவுக்கு "ஜாக்பாட்' சிரஞ்சீவி உட்பட ஆறு பேருக்கு பதவி,அதிகபட்சமாக, ஆந்திராவைச் சேர்ந்த, ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், பல்லம் ராஜு, இணை அமைச்சர் பதவியிலிருந்து, கேபினட் அமைச்சராகவும், நடிகர் சிரஞ்சீவி, தனிப் பொறுப்புடன் கூடிய, இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதுதவிர, சூர்ய பிரகாஷ் ரெட்டி, சர்வ சத்ய நாராயணா, பல்ராம் நாயக், கில்லி கிருபாராணி உள்ளிட்டோர், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.

Saturday, October 27, 2012

மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர்

மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பிரச்சினை நவம்பருக்குள் முன்னேற்றம் ஏற்படும். 2013-க்குள் முழுவதும் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் நம்புகிறோம் , நம்பிக்கைதானே வாழ்க்கை !

வணக்கம் !

வணக்கம் நண்பர்களே ! இது என்னுடடைய முதல் தமிழ் பதிவு , நீண்ட நாட்களாக நான் கனவு கண்ட எனது பதிவுகளை இனிமேல் இங்கு படிக்கலாம் . உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் !   நன்றி !